Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரேஷனில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை - புகார்களுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம்

ரேஷனில்  ரூ.35க்கு வெங்காயம் விற்பனை - புகார்களுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம்
பகிரவும் WhatsApp Facebook

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டம் தொடர்பான மக்களின் புகார்கள் மற்றும் குறைகளைத் தீர்க்க வாட்ஸ்அப் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளதாவது :

அத்தியாவசியத் தேவையான வெங்காயத்தின் விலை அண்மைக்காலமாக வெளிச்சந்தைகளில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தி, மக்களுக்குக் குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், நியாயவிலைக் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ், கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 8,914 நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 


இந்த விற்பனை சென்னையில் நேற்றிலிருந்தும் மற்ற மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற நியாயவிலைக் கடைகளில் இன்று முதலும் முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த திட்டம் தொடர்பாகப் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் புகார்கள் அல்லது குறைகள் இருந்தால், அதனைத் தெரிவிப்பதற்காக 96005 61969 என்ற வாட்ஸ்அப் சேவை எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது

முந்தைய செய்தி
ஈரோடு, திருப்பூர் தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழிற்கூடங்கள் அமைக்க விருப்பமா? விண்ணப்பிங்க!
அடுத்த செய்தி
பனை மரங்களை பாதுகாக்க வேண்டும்: சௌமியா அன்புமணி

தொடர்புடைய செய்திகள்